குண சித்திரம் 2016
மனிதன் பிறக்கும் போதும் ,பின்னர் இறக்கும் போதும் தனக்கு தெரிந்த
நிலையில் இரண்டுமே இடம்பெறுவதில்லை ,என்பதை ,தானாக ,எவரும்
அறியாவிட்டாலும் ,பிறருக்கு ,நேரும் போது காண்பதன் மூலம் ,தனக்கு
எப்படி , அமைத்திருக்கும் ,என்பதை உணர்ந்து கொள்ளக்கூடியதே .எல்லோரையும் ,போலவே ,என்தாயார் என்னையும் பத்துமாதங்கள் வரை
வயிற்றில் ,தாங்கி ,காத்து , என்முகத்தை தன் பார்வையில் பார்த்து ,எத்துணை கொள்ளை இன்பமும் , அன்பும் ,கொட்டி அணைத்து ,மகிழ்ச்சியில்
அத்தனை பிரசவவேதனை களையும் மறந்து ,எனக்கு முலை அருந்த கண்டு
மகிழ்ந்திருப்பாள் ,என்பதை , தாய்மையின் ,சிகரத்தை , ஒவ்வொரு மனிதனும்
அடைந்திருப்பார்கள் . தாய்க்கும் குழந்தை க்கும் அந்த முதல் நாள் ,வாழ்கையின் திருநாள் . அண்மையில் அமரத்துவம் எய்திய ,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ,ஏ .பி .ஜே .அப்துல் கலாம் அவர்கள் ,பிறந்த நாள்
ஏன் கொண்டாட படுகிறது ,என்று கேட்டபோது ,"அந்த நாள் ஒருவர் ,தன் தாயின் வயிற்றில் இருந்து ,பிறந்ததும் முதலில் அழும் குரல் கேட்டு ,தாயின்
உள்ளம் சிரித்த நாள் . என்பது தான் , "பிறந்த நாள் ", என்று கொண்டாடப்-
படுகிறது ,என்று கூறினார் ! அதே ,போன்று ,ஒவ்வொரு மனிதரின் பிறந்த
நாளும் அமைகிறது போலும் !
11.2.1941 ல் , ஐந்தாம் வயதில் , தமிழ் நெடுங்கணக்கு ,எண் கணிதம் , என
புகட்டிய ,ஆசிரிய பெருமக்களை ,இந்நாளிலும் ,நினைத்து பார்க்கிறேன் .
பாடசாலை தொடங்க ,முன்னர் ,அன்று ஆத்தி சூடி ,கொன்றைவேந்தன் ,
நல்வழி ,நீதி வாக்கியங்கள் ஓதிய பின்னரே படிப்பு தொடங்கும் .முதலில் ,
மாணவர் ,தினவரவு ஏடு பதியப்படும் .அப்போது பெயர் கூறி ,கூபிடுகையில் ,
பெயருக்குரிய மாணவர் ,"குணரத்தினம் வந்தேன் வாத்தியார் ",என்ற வாறு
அனைவரை யும் பதிவது கடமையாகும் .

No comments:
Post a Comment