Wednesday, 26 August 2015

 குண சித்திரம்  2016 

மனிதன் பிறக்கும் போதும் ,பின்னர் இறக்கும்   போதும் தனக்கு  தெரிந்த 
நிலையில்  இரண்டுமே  இடம்பெறுவதில்லை ,என்பதை ,தானாக ,எவரும் 
அறியாவிட்டாலும் ,பிறருக்கு ,நேரும் போது  காண்பதன் மூலம் ,தனக்கு 
எப்படி , அமைத்திருக்கும் ,என்பதை உணர்ந்து கொள்ளக்கூடியதே .எல்லோரையும் ,போலவே ,என்தாயார்  என்னையும் பத்துமாதங்கள் வரை 
வயிற்றில் ,தாங்கி ,காத்து , என்முகத்தை தன்  பார்வையில் பார்த்து ,எத்துணை  கொள்ளை இன்பமும் , அன்பும் ,கொட்டி அணைத்து ,மகிழ்ச்சியில் 
 அத்தனை  பிரசவவேதனை களையும் மறந்து ,எனக்கு முலை  அருந்த கண்டு 
மகிழ்ந்திருப்பாள் ,என்பதை , தாய்மையின் ,சிகரத்தை , ஒவ்வொரு மனிதனும் 
அடைந்திருப்பார்கள் . தாய்க்கும் குழந்தை க்கும்   அந்த முதல் நாள் ,வாழ்கையின் திருநாள் . அண்மையில்  அமரத்துவம் எய்திய ,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் ,ஏ .பி .ஜே .அப்துல் கலாம் அவர்கள் ,பிறந்த நாள் 
 ஏன் கொண்டாட படுகிறது ,என்று கேட்டபோது ,"அந்த நாள் ஒருவர்  ,தன்  தாயின் வயிற்றில் இருந்து ,பிறந்ததும் முதலில் அழும் குரல் கேட்டு ,தாயின் 
உள்ளம்  சிரித்த நாள் . என்பது தான் , "பிறந்த நாள் ", என்று கொண்டாடப்-
படுகிறது ,என்று கூறினார் ! அதே ,போன்று ,ஒவ்வொரு மனிதரின்  பிறந்த 
நாளும்  அமைகிறது போலும் !
11.2.1941 ல் , ஐந்தாம் வயதில் , தமிழ் நெடுங்கணக்கு ,எண்  கணிதம் , என 
புகட்டிய ,ஆசிரிய  பெருமக்களை ,இந்நாளிலும் ,நினைத்து பார்க்கிறேன் .
பாடசாலை தொடங்க ,முன்னர் ,அன்று ஆத்தி சூடி ,கொன்றைவேந்தன் ,
நல்வழி ,நீதி வாக்கியங்கள்  ஓதிய பின்னரே  படிப்பு தொடங்கும் .முதலில் ,
மாணவர் ,தினவரவு  ஏடு  பதியப்படும் .அப்போது பெயர் கூறி ,கூபிடுகையில் ,
பெயருக்குரிய மாணவர் ,"குணரத்தினம் வந்தேன் வாத்தியார் ",என்ற வாறு 
அனைவரை யும் பதிவது கடமையாகும் .

Tuesday, 25 August 2015

My Life within & out

கால நதியின்  பாய்ச்சல் ..........
 அறியா மறை போல  ,மறையா  அறிவைப்போல  ,தெரியா , ஊருக்கு ,வழி
  செல்லும் ,பயணம் ,போன்றதே  ,மனித வாழ்க்கை , என்று ,சில நேரங்களில்
என்னுள் ,எண்ணம் எழுவதுண்டு . உயிர்களின் தோற்றம் ,இந்த ,உலகம்
தோன்றி ,மறைந்த ,எண்ணற்ற வகையான மிருகங்கள் ,மரம் ,கொடி , பறவை
என ,எத்தனை  ,எத்தனை ,வகை ,இன்று  அறிய  முடியாமல் அழிந்துள்ளன .
ஏன் ,இன்றும்  ,நடப்பதை கூர்ந்து கவனித்தால் , குறிப்பாக ,மனித வர்க்கம்
வாழ்க்கை  ,அதன் இயற்கை .பற்றி ,அறிந்தும் ,உணரவில்லை ,என்று கூறி -
விடலாம் !தன்னை ,தனது உயிரை ,உடல் கூற்றை ,நிலையாமை ,என
மனிதன் ,புரிந்து கொள்ளவில்லை ,என்று எண்ண  வேண்டி  தோன்றுகிறது !
உலகில் ,இன்று ,எங்கு பார்க்கினும் ,ஒரு வித அவசரம் ,அறியாமை ,கோபம் ,
பொறாமை , போட்டி ,அமைதியின்மை ,பொய் , பேராசை ,அல்லவா ,ஆட்சி
புரிகிறது !

ஏன்  பிறந்தோம் ?
எதனையும் ,எண்ணி ,அதன் காரணத்தை ,தெரிந்து கொள்ள மனிதன் மட்டுமே
முயலுகிறான் ; முயற்சி செய்கிறான் . மனிதன் ,உலகின் ,தோற்றம் ,முழு
அண்டம் ,கோள்கள் ,அறியா பால் வெளி ,அங்கு தங்கும் ,பல கோடி விண்  -
மீன்கள் , இன்னும்  கிரகங்கள் ,யாவும் எப்படி ,யாரால் தோன்றின ,தோற்றிவித்தவர் யார் ,ஒருவர் ஆயின் ,அவரை தோற்றிவித்தவர்  யார் ,என்றெல்லாம் ,மனிதனால் ,எழுப்பப்படும் ,கேள்விகள் ; ஆயினும் இவற்றுக்கு இதுவரை   எவராலும் பதில் ,சான்று என ,அறியமுடியவில்லை .இயற்கை ,
மதம் ,மத எதிர்ப்பு , என  பல கொள்கை கள்  கோட்பாடுகள் ,எழுத்தாலும் பேச்சாலும் , முன் ம் வைக்கப்பட்டாலும் ,எவற்றாலும் ,முழுமையான  ,விடை
கூறமுடியவில்லை ! உயிர்கள் யாவும் , வாழ்ந்து மடிவது தான் இதுவரை
கண்ட  உண்மை !இதற்காக ,பிறந்து ,வளர்ந்து ,வாழ்ந்து ,மறைவது ஒன்று மட்டும் ,என்றால் ,அனைத்துக்கும் ,இது பொது விதியா ,அல்லது ,பிறந்து
வாழும் மனிதனுக்கு  இதனை தாண்டியும் சிறப்பாக ,கடமை பொறுப்பு ,
என உண்டா ,என்ற கேள்வி எழுகிறது ! மற்றைய உயிர்களை விட  ,மனிதன்
தன்னை பற்றி ,தான்  வாழும் உலகம் ,உயிர்கள் ,இயற்கை , பற்றி அறியும்
வழிகளை  கண்டறிந்து கொண்ட  ஓர் ஒப்பற்ற  பிறவியாக  கருதப்படுகிறான் .
அந்த வகையில் ,மனிதன் ,மற்ற ஏனைய  உயிர்கள் அனைத்தில் இருந்தும்
வேறு பட்டு  நிற்கிறான் ! தொடக்க காலத்தில் ,விலங்குகளை  போன்று ,
வாழ்ந்த  அவன் ,தனது ,திருந்திய  முறையால் ,விலங்குகளில் இருந்து  வேறுபட்டு ,வாழ அறிந்து கொண்டான் , பின்னர் ,தொடர்ந்தும் ,திருந்தா
வாழ்வில் ,உண்பதும் உறங்குவதும் ,இனப்  பெருக்கமும் மட்டுமே அனுபவிக்க , மனிதன்  அவற்றைக் கொண்டு ,தனக்கு பயன் பெற அறிந்து
கொண்டான் ; பின்னர் ,தனது ,மனித உறவுகளையும்  ,முடிந்த வரை ,பலம்
கொண்டு ,அடக்கி ஆள , தொடங்கி  பின்னர் , அடிமைகளைப் போல ,மனிதன்
மாறி ,ஆண்டான் -அடிமை , அறிமுகம் உருவாக்கி , அதனை  ,சமுகம் ,நாடு
தாண்டி ,உலகம் ,என ஆதிக்கம் செய்தான் ! இன்றைய உலக ,போக்கு ,இந்த
போக்கு , இறுதியில் , போட்டி ,மோதல் , என விரிந்திருப்பதும் ,இதற்கு ,தேவை ,தனிமனித ,விடுதலை , எல்லா வகைத் தளை  களையும் விலக்கி  சுய
சிந்தனையுடன் ,வாழ வேண்டும் .