Tuesday, 9 November 2010

காலம் எழுதிசென்ற கோலங்கள் -1

நாம் ,இதுவரை ,பிறந்து ,அறிவறிந்த நாள் முதல் ,கண்டு ,பழகிய ,உறவு ,நட்பு ,
என்ற வட்டத்துள் ,பெற்றோர் ,கூடப் பிறந்தவர் ,கூடிப் பழகிய தோழர்கள் ,
உறவின் முறையினர் ,என்று,அடையாளம் கண்டு ,எம்மீது ,அன்பு கொண்ட பலர் ,
பள்ளி ,கல்லூரித் தோழர்கள் ,ஊரில் வாழ்ந்த மனிதர்கள் ,குறிப்பாக ,என்றும் ,
நினைவில் நிற்கும் ஆசிரிய பெருமக்கள் ,என்று ,எமது வாழ்கையில் ,இடம் பெற்று ,எம்மீது ,எத்தகைய ,செல்வாக்கை ,கொண்டிருந்தார்கள் ,என்பதை ,
பருவங்கள் ,தாண்டிய ,முதுமை அடைந்தாலும், நினைவில் நிற்கும் ,என்பதை ,
அணைவருமே நாம் ,அறிவோம் ! அன்று ,1941,ல் ,எனது ,ஐந்தாம் ,அகவையில்,
எனது ,அழகிய ,சிறிய ,இருபாலை ,ஊரின், ஒரே ,தமிழ் ,கலவன் ,கிறிஸ்தவ ,
பாடசாலயில் ,இணைந்து கொண்டேன் ! அந்நாளில் ,பாடசாலைக்கு ,செல்வது
மிகுந்த பயங்கரமாகவே ,எம்போன்றவர்களுக்கு ,அன்று அச்சம் ,தந்ததற்கு ,
சில சட்டம்பி மார்களின் ,பிரம்படி தான் ,கரணம்!

No comments:

Post a Comment