Tuesday, 9 November 2010

காலம் எழுதிச் சென்ற கோலங்கள் -2

அன்று ,ஆரம்பப் பாடசாலை சென்ற ,நான் ,அங்கு ,என்னையும் ,ஏனைய
சிறார்களையும் ,அன்புடன் ,அரவணைத்து ,தமிழ் மொழி யை ,முதன் ,முதல்
புகட்டிய ,ஞானம்மா டீச்சர் ,என்றும் என் ,நினைவில் நிலைத்து ,வாழ்கிறார் ;
அவரைப்போல ,அடுத்து ,புதுவாத்தியர்,அண்மையில், தனது எண்பதாவது,
கடந்து,மறைந்த ஆசிரிய மணி ,பண்டிதர் ,சதாசிவம் ,அவர்களின் ,தமிழ்
மொழி ,புகட்டலும் ,எம்மால் ,என்றுமே ,மறக்கமுடியவில்லை!கதை கூறி ,
தமிழ் வளர்த்தவர் ; என்றும் ,எமது ,தமிழ் ஆவலுக்கு தளம் அமைத்தவர்களில் ,
முதன்மையானவர்!காந்தி மகான் ,சுட்டப்பட ,அன்று ,அந்த செய்தியை ,எனக்கு ,
முதலில் ,வீதியில் ,கண்டவுடன் ,தனது துவிச்சகர வண்டியிலிருந்து ,இறங்கி,
தனது வண்டியில் ,கறுப்பு,கொடி யுடன் ,"காந்தி மகான் சுடப்பட்டார் !", என்ற
செய்தியை ,அறிவித்தவர்!அன்று ,வீதிகள் தோறும் ,யாழ்நகர் ,முதல் ,கிராமங்கள்
வரை ,கறுப்புக்கொடிகள் பறக்கவிட்டார்கள் ,சோக கீதங்கள் வானொலி ,இசை
தட்டு மூலம் ,"கருணா மூர்த்தி காந்தி மகாத்மா, நம் மகாத்மா!"காந்தியை போல்
ஒரு சாந்த மூர்த்தியை காண்பதும் அரிதாமே!"போன்ற , பாடல் பலவும் ,
முழங்க கேட்டது ,என் ,நினைவில் ,அறுபதாண்டு ,கடந்த ,நிலையிலும் ,
இன்றும் ,உள்ள ஒன்று! அன்று ,பாடசாலை செல்லாத ,பிள்ளைகளை , வீடு
சென்று ,அழைத்து போவது ,ஆசிரியர் ,கடமை போன்று .காணப்பட்டதும் ,
பாடசாலை சென்று வர ,மறுக்கும் மாணவர்களுக்கு ,பிரம்படி ,கிடைப்பது
கிடைக்கும்! இரண்டாவது ,உலக ,யுத்தம் ,நடந்த ,அந்த நாட்களில் ,ஆங்கில ,
அரசு ,பாடசாலைகளில் ,மதிய உணவு ,தேநீர் ,வழங்கியது !சோறும் ,கறியும் ,
பின்னர், பாண் ,பால் ,பணிஸ் ,எனவும் ,வழங்கினர் .ஐம்பதாம் ,ஆண்டு ,தை ,
முதல், ஆங்கில கல்வி ,கற்க ,எனது ,குறிப்பாக ,எனது ,தாயாரின் ,அரும்
முயற்சியினால் ,கோப்பாய் ,கிறிஸ்டியன் கல்லூரியில் ,முதலாம் பாரத்தில் ,
"சி " யில் , அனுமதி பெற்றோம் .அன்று ,கல்லுரிகளில் ,இடம் ,பெறுவது ,
எம்மை போன்ற ,வறிய குடும்பங்களில் இருந்து ,வருபவர் படும் துயர்
எத்தகையது ,என்பதும் ,பின்னர் ,பணம் ,செலுத்துவதில் உள்ள ,கஷ்டமும் ,
நான் ,நன்கு ,பட்டறிந்த ஒன்று! (கோலம் இடப்படும் )

காலம் எழுதிசென்ற கோலங்கள் -1

நாம் ,இதுவரை ,பிறந்து ,அறிவறிந்த நாள் முதல் ,கண்டு ,பழகிய ,உறவு ,நட்பு ,
என்ற வட்டத்துள் ,பெற்றோர் ,கூடப் பிறந்தவர் ,கூடிப் பழகிய தோழர்கள் ,
உறவின் முறையினர் ,என்று,அடையாளம் கண்டு ,எம்மீது ,அன்பு கொண்ட பலர் ,
பள்ளி ,கல்லூரித் தோழர்கள் ,ஊரில் வாழ்ந்த மனிதர்கள் ,குறிப்பாக ,என்றும் ,
நினைவில் நிற்கும் ஆசிரிய பெருமக்கள் ,என்று ,எமது வாழ்கையில் ,இடம் பெற்று ,எம்மீது ,எத்தகைய ,செல்வாக்கை ,கொண்டிருந்தார்கள் ,என்பதை ,
பருவங்கள் ,தாண்டிய ,முதுமை அடைந்தாலும், நினைவில் நிற்கும் ,என்பதை ,
அணைவருமே நாம் ,அறிவோம் ! அன்று ,1941,ல் ,எனது ,ஐந்தாம் ,அகவையில்,
எனது ,அழகிய ,சிறிய ,இருபாலை ,ஊரின், ஒரே ,தமிழ் ,கலவன் ,கிறிஸ்தவ ,
பாடசாலயில் ,இணைந்து கொண்டேன் ! அந்நாளில் ,பாடசாலைக்கு ,செல்வது
மிகுந்த பயங்கரமாகவே ,எம்போன்றவர்களுக்கு ,அன்று அச்சம் ,தந்ததற்கு ,
சில சட்டம்பி மார்களின் ,பிரம்படி தான் ,கரணம்!

Saturday, 6 November 2010

வாழ்கை ஒரு நாடகமா?

உயிரின் தோற்றம்,மனிதனின் வளர்ச்சி,ஏனைய சீவர்கள் ,இயற்கை ,அண்டம் ,
அதுக்கப்பால்,அதனையும் ,தாண்டிய ,அறியமுடியாத ,அமைப்பு ,என எல்லா -
அறிந்த ,அறிய முடியாத ,பல,விசித்திர ,சூழலின் பின்னணியில் ,இருப்பும்
உயிர் வாழ்வும் ஏன்,என்ன,என்பதை ,தமக்குள் எண்ணி ,வியக்காத மனிதன்
இருக்க முடியாது !மனித உடல் ,மனித மனம் ,இதயம் ,மனிதனின் உணர்வுகள் ,
லேனோர்ட் வூல்ப் ,என்ற ,எழுத்தாளர்,அறிஞர் ,என்பவர் ,கூறுவதுபோல
"நான் இல்லாமையில் இருந்து ,பிறந்தேன் ,ஈற்றில் ,இல்லாமைகுள்ளேயே
மறைந்து ,விடுவேன் !",எனக்கு நான் மட்டும் தான் !",என்பது ,சிந்திக்கவைக்கும்
ஒன்று! "வாழுவது ,கணமும் அறியாத ,மனித மனம், எண்ணுவதோ ,கோடிக்கும்
அதிகம்!", என்ற ,வள்ளுவர் ,கூற்றும் ,மனங்கொள்ள தக்கது!